×

ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

மேட்ரிட் : ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவர், “ஸ்பெயின் நாட்டில் வெற்றிகரமாக தொழில் முதலீட்டு ஈர்ப்பு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி. கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டேன்.நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree நிறுவனத்துடன் கலந்துரையாடினேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன், சில நாள்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ediban ,Spain ,Chief Minister K. ,Stalin ,Madrid ,Edipan ,Chief Minister ,Mu. K. Stalin ,M.O. K. Stalin ,K. Stalin ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ருப்லேவ் சாம்பியன்